அனுமதியின்றி மரங்களை வெட்டிய 6 பேருக்கு ரூ.24 ஆயிரம் அபராதம்


அனுமதியின்றி மரங்களை வெட்டிய 6 பேருக்கு ரூ.24 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 11 May 2021 6:48 AM IST (Updated: 11 May 2021 6:49 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி மரங்களை வெட்டிய 6 பேருக்கு ரூ.24 ஆயிரம் அபராதம்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலா உள்ளது. இங்கு வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு இருக்கிறது. இங்கு யூக்கலிப்டஸ் மரங்களை சிலர் விறகுக்காக வெட்டியதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் ஆனந்தகுமார், வன காப்பாளர் மாதவன் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது 5 மரங்கள் வெட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கூடலூர் மாவட்ட வன அலுவலர் ஓம்கார் உத்தரவின்பேரில் அனுமதியின்றி மரங்களை வெட்டிய மாணிக்கம் உள்பட 6 பேருக்கு ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

Next Story