திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.12 கோடிக்கு மதுபானம் விற்பனை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.12 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல், முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கு நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும், என அரசு அறிவித்தது. அதனால் நேற்று முன்தினமும், அதற்கு முந்தைய நாளும் மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. மதுபிரியர்கள் ஏராளமான மதுபானங்களை வங்கி சென்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 220 டாஸ்மாக் கடைகள் உள்ளன. அதன் மூலம் ஒரு நாளைக்கு சுமார் ரூ.3½ கோடிக்கு மதுபானம் விற்பனையாகும். முழு ஊரடங்கு அறிவிப்பு காரணமாக நேற்று முன்தினம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மாலை 6 மணி வரை விறு விறுப்பாக மதுபானம் விற்பனையானது.
ரூ.12 கோடி
இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.12 கோடிக்கு மதுபானம் விற்பனை நடந்ததாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story