தாம்பரம் உணவு பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் ‘ஸ்மார்ட் ரேசன் கார்டு’ பெற குவிந்த பொதுமக்கள்


தாம்பரம் உணவு பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் ‘ஸ்மார்ட் ரேசன் கார்டு’ பெற குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 11 May 2021 5:22 AM GMT (Updated: 11 May 2021 5:22 AM GMT)

தாம்பரம் உணவு பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் ‘ஸ்மார்ட் ரேசன் கார்டு’ பெற குவிந்த பொதுமக்கள்.

தாம்பரம், 

கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர மற்றவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள உணவு பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் நேற்று காலை, ‘ஸ்மார்ட் ரேசன் கார்டு’ வாங்க பொதுமக்கள் குவிந்தனர். ஒரே நாளில் 230 பேர் வரை திரண்டதால் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நோய் தொற்று பரவும் வகையில் வரிசையில் நின்றிருந்தனர்.

இது குறித்து உணவு வழங்கல் துறை அலுவலக அதிகாரிகள் கூறும்போது, “தேர்தல் காரணமாக ‘ஸ்மார்ட் ரேசன் கார்டு’ வழங்கும் பணிகள் தடைபட்டு இருந்தன. தேர்தல் நடத்தை விதிகள் முடிந்துள்ள நிலையில் தற்போது விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ‘ஸ்மார்ட் ரேசன் கார்டு’ வழங்கும் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளன. இதற்கு போலீசாரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி ‘ஸ்மார்ட் ரேசன் கார்டு’ வாங்கிச் செல்லலாம்” என்றனர்.

Next Story