சென்னை போலீசார் சார்பில் 24 மணி நேரம் இயங்கும் கொரோனா தகவல் உதவி மையம்; செல்போன் எண்கள் அறிவிப்பு
கொரோனா 2-வது அலை பரவலையொட்டி சென்னை போலீஸ் சார்பில் 24 மணி நேரமும் இயங்கும் உதவி மையம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த உதவி மையத்தின் மூலம் முழு ஊரடங்கு மற்றும் அரசின் கட்டுப்பாட்டு நடைமுறைகள் குறித்த சந்தேகங்கள் மற்றும் தேவையான விளக்கங்களை பொதுமக்கள் பெறலாம். குறிப்பாக ‘இ-பாஸ்’ நடைமுறைகள் பற்றி அறிந்துகொள்ளலாம்.மேலும் முதியோர் மற்றும் தனியாக வசிக்கும் அல்லது ஆதரவின்றி வசிக்கும் பெண்கள் உதவி பெறலாம். ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் வசதி படுக்கைகள் விவரம், கொரோனா உதவி மையங்கள், சிகிச்சை பெறும் இடங்கள், இதர அத்தியாவசிய பொருட்கள் பெறும் நிலை மற்றும் ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்குதல் உள்ளிட்ட முக்கியமான விவரங்கள் குறித்த விவரங்களை பெறலாம்.
24 மணி நேரமும் இயங்கும் இந்த போலீஸ் உதவி மையமானது, ஒரு உதவி கமிஷனர் தலைமையிலான போலீஸ் குழுவினரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும். எனவே தேவையான உதவிகள், விளக்கங்கள் பெற இந்த உதவி மையத்தை 94981 81236, 94981 81239 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story