கொரோனாவுக்கு பலியானவரின் உடலை அடக்கம் செய்ய தயங்கிய உறவினர்கள்; கவச உடை அணிந்து குழியில் புதைத்த பொன்னேரி ஊராட்சி மன்ற தலைவர்


கொரோனாவுக்கு பலியானவரின் உடலை அடக்கம் செய்ய தயங்கிய உறவினர்கள்; கவச உடை அணிந்து குழியில் புதைத்த பொன்னேரி ஊராட்சி மன்ற தலைவர்
x
தினத்தந்தி 11 May 2021 4:48 PM IST (Updated: 11 May 2021 4:48 PM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி அருகே உள்ள திருவேங்கடாபுரத்தை சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் இறந்தார்.

இதையடுத்து ஆஸ்பத்திரியில் இருந்து பலியானவரின் உடல் பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் மூலம் சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டபட்டு தயாராக இருந்த குழியில் ஆம்புலன்சில் இருந்து உடலை கீழே இறக்கி பள்ளத்தில் புதைக்க கொரோனா மீதுள்ள அச்சத்தால் உறவினர்கள் வர தயங்கினர். அப்போது தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, வார்டு உறுப்பினர் பாலாஜி மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கொரோனா வைரஸ் பாதுகாப்பு உடை அணிந்து சடலத்தை கயிறு கட்டி குழியில் இறங்கி புதைத்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று பயத்தில் புதைக்க உறவினர்களே தயக்கம் காட்டிய நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர் ஆகியோர் சேவையின் செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story