வெறிச்சோடிய பஸ் நிலையம்


வெறிச்சோடிய பஸ் நிலையம்
x
தினத்தந்தி 11 May 2021 5:28 PM IST (Updated: 11 May 2021 5:28 PM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் முககவசம் வழங்கி அறிவுரை வழங்கினர்.

உடுமலை
உடுமலையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் முககவசம் வழங்கி அறிவுரை வழங்கினர்.
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தாக்குதலின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது.  அதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி நேற்று உடுமலையில் பஸ்கள், வாடகை கார்கள் வேன்கள் ஆட்டோக்கள் ஆகியவை ஓடவில்லை. ஜவுளி கடைகள், நகைக்கடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை கடைகள் டெய்லர் கடைகள், சலூன் கடைகள் உள்ளிட்ட பல கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
மருந்து கடைகள்,பால் கடைகள் ஆகிய கடைகள் திறந்திருந்தன.அதே சமயம் அரசு அறிவித்துள்ள தளர்வுகளின்படி மளிகை கடைகள்,பால் கடைகள், காய்கறிகடைகள் மற்றும் இறைச்சிக்கடைகள், ராஜேந்திரா சாலையில் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் உள்ள தினசரி சந்தை ஆகியவை மதியம் 12 மணிவரை திறந்திருந்தன. அதன்பிறகு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அதனால் வீதிகள் வெறிச்சோடியிருந்தன.
முககவசம்
அவ்வப்போது ஓரிரு லாரிகள் மற்றும் சில தனியார் கார்கள் ஓடின. அவ்வப்போது சிலர் இருசக்கர வாகனங்களில் சென்றனர். அவர்களை போலீசார் நிறுத்தி கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுரை வழங்கினர். 
மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் முககவசம் வழங்கி, கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு அறிவுரை வழங்கினர். அத்துடன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

---
உடுமலை மத்திய பஸ் நிலையம் வெறிச்சோடி இருந்ததை படத்தில் காணலாம்.
---------


Next Story