தேர்தல் பாதுகாப்பு பணி: போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்று


தேர்தல் பாதுகாப்பு பணி: போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்று
x
தினத்தந்தி 11 May 2021 8:13 PM IST (Updated: 11 May 2021 8:13 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பாதுகாப்பு பணியை சிறப்பாக மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலின் போது 1,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லுதல், பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையம் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அளித்தல் உள்ளிட்ட பணிகளில் போலீசார் ஈடுபட்டனர். இந்த பாதுகாப்பு பணியை சிறப்பாக மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகளுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தலைமை தாங்கினார். திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி கலந்து கொண்டு போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

Next Story