தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
கூடலூரில் கொரோனா பரவலால் சாலை மூடப்பட்டது. தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
கூடலூர்
கூடலூரில் கொரோனா பரவலால் சாலை மூடப்பட்டது. தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா பரவல்
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ள சளிவயல், மங்குழி, துப்புக்குட்டி பேட்டை, எம்.ஜி.ஆர். நகர் உள்பட பல இடங்களில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது.
இதனால் இதுவரை 35-க்கும் மேற்பட்ட இடங்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் பந்தலூர் தாலுகா சோலாடி ஆதிவாசி மக்களும் கொரோனா வால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கூடலூர் சின்ன பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
இதைத்தொடர்ந்து கூடலூரில் இருந்து கோத்தர் வயலுக்கு செல்லும் சாலை இரும்பு தடுப்புகள் கொண்டு மூடப்பட்டன. பின்னர் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து அப்பகுதி மக்கள் வெளியே செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டது. என நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ள தனிமைப் படுத்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கூடலூரில் இருந்து கோத்தர்வயலுக்குச் செல்லும் சாலை மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.
பாதுகாப்பு போட உத்தரவு
தொடர்ந்து கூடலூர் எஸ்.எஸ்.நகர், எம்.ஜி.ஆர். நகர், நந்தட்டி ஆகிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு பணிகளை பார்வையிட்டார்.
அந்தப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதை கண்டார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் வெளியே செல்வதை தடுக்க அங்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு போடும்படி உத்தரவிட்டார்.
மேலும் தொற்று அதிகளவு பரவும் இடங்களில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்த சுகாதார துறையினருக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜகுமார், தாசில்தார் தினேஷ், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் கதிரவன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story