ஊட்டி மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை


ஊட்டி மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை
x
தினத்தந்தி 11 May 2021 9:05 PM IST (Updated: 11 May 2021 9:05 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை

ஊட்டி

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மளிகை, பலசரக்கு, நாட்டு மருந்து கடைகள் மட்டும் செயல்பட்டு வருகிறது. 

மேலும் 3 ரேஷன் கடைகள் மதியம் 12 மணி வரை இயங்குகிறது. கொரோனா பரவலை தடுக்க மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று நகராட்சி ஊழியர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். 

சம்பந்தப்பட்ட நபரின் பெயர், செல்போன் எண், வெப்பநிலை குறிக்கப்படுகிறது. உடலில் வெப்பநிலை அதிகமாக இருந்தால் கொரோனா பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

 3 நுழைவுவாயில்களில் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பின்னர் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். 


Next Story