போடியில் நூதன முறையில் கஞ்சா விற்ற பெண் கைது


போடியில் நூதன முறையில் கஞ்சா விற்ற பெண் கைது
x
தினத்தந்தி 11 May 2021 10:08 PM IST (Updated: 11 May 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

போடியில் நூதன முறையில் கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.

போடி:
போடி டவுன் போலீசார் நேற்று நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழத்தெரு, அரசமர தெருவில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கையில் வாளியுடன் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவர் வைத்திருந்த வாளியை சோதனை செய்தனர். அப்போது அதில் கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களாக பிரித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லும் பிடிபட்ட அந்த பெண் அரசமர ெதருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மனைவி பஞ்சவர்ணம் (வயது 58) என்பது தெரியவந்தது. இதையடுத்து பஞ்சவர்ணம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story