ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணர்கள் வெடிக்க செய்தனர்


ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணர்கள் வெடிக்க செய்தனர்
x
தினத்தந்தி 11 May 2021 10:46 PM IST (Updated: 11 May 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

செருதூர் மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணர்கள் வெடிக்க செய்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

வேளாங்கண்ணி:
செருதூர் மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணர்கள் வெடிக்க செய்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
செருதூர் மீனவர்கள்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியத்தில் செருதூர் மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து 300 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த சபரிநாதன் என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள்  கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இவர்கள், வேதாரண்யத்திற்கு கிழக்கே சுமார் 8 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடலில் வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வலையில் ஒரு பெரிய இரும்பு பொருள் சிக்கியது. அந்த இரும்பு பொருளை வலையிலிருந்து எடுத்துக்கொண்டு கரைக்கு வந்தனர்.
ராக்கெட் லாஞ்சர்
பின்னர் இதுகுறித்து மீனவர்கள் வேளாங்கண்ணி கடலோரக் காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீனவர் வலையில் சிக்கிய இரும்பு பொருளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் மீனவர்கள் வலையில் சிக்கியது ராக்கெட் லாஞ்சர் என்பது தெரியவந்தது. அதனை போலீசார், வேளாங்கண்ணிக்கு கொண்டு வந்தனர். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 
அதன்பேரில் சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர் குழுவினரான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கேஸ்வரன், ஜெயராமுடு, போலீசார் பரமசிவம், புவியரசு அருண்ராஜா, சுந்தரகுமார் ஆகிய 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று வேளாங்கண்ணிக்கு வந்தனர். பின்னர் கைப்பற்றப்பட்ட ராக்ெகட் லாஞ்சரை பார்வையிட்டு அதை வெடிக்க வைக்க முடிவு செய்தனர்.
வெடிக்க வைத்தனர்
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள்  ராக்கெட் லாஞ்சரை அந்த பகுதியில் உள்ள கடற்கரைக்கு கொண்டு சென்று பள்ளம் தோண்டி அதற்குள் ராக்கெட் லாஞ்சரை வைத்து வெடிக்க செய்தனர். அப்போது வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தத்துடன் பூமியில் இருந்து புழுதியை கிளப்பி கொண்டு 10 அடி உயரத்துக்கு மணல் பறந்தது.
இந்த நிகழ்ச்சியின் போது வேளாங்கண்ணி கடலோரப் படை பொலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Next Story