கொரோனா சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகளில் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க வேண்டும்


ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க வேண்டும்
x
ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க வேண்டும்
தினத்தந்தி 11 May 2021 10:57 PM IST (Updated: 11 May 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகளில் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க வேண்டும்

கோவை

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. முதல் அலையை காட்டிலும் 2-வது அலையின் தாக்கம் அதிகளவு உள்ளது. 
இதனிடையே கொரோனா நோய் தீவிரமானவர்களுக்கு ரெம்டெசிவிர் என்ற மருந்து வழங்கப்படுகிறது. 

இதன் மூலம் நோயின் தீவிரத்தை குறைக்க வும், நோயாளிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் காலத்தை குறைக்கவும் முடியும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். 

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை தமிழக அரசு தொடங்கியது.

இதையடுத்து இந்த மருந்தை வாங்குவதற்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து குவிந்தனர். 

தினந்தோறும் ஏராளமானோர் இந்த மருந்துக்காக 3 நாட்களுக்கும் மேல் காத்துக்கிடந்தனர்.

இதனால் குறித்த நேரத்தில் மருந்து கிடைக்காமல் பலர் பாதிக்கப்பட் டனர். இருப்பினும் நோயால் பாதிக்கப்பட்ட தனது உறவினர்களுக்கு எப்படியாவது ரெம்டெசிவிர் மருந்தை வாங்கிவிட வேண்டும் என்ற நிலையில் பலர் வரத்தொடங்கியதால், அங்கு நாளுக்கு நாள் அங்கு கூட்டம் அலைமோதியது.


மக்களின் இந்த சிரமத்தை உணர்ந்த தமிழக அரசு, ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை கோவை உள்பட 6 நகரங்களுக்கு விரிவு படுத்தியது.  அதன் படி கோவை பீளமேட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் கடந்த 8-ந்தேதி முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது.

இதையடுத்து இந்த மருந்தை வாங்க கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து குவிந்தவாறு உள்ளனர். ஆனால் நாள் ஒன்றுக்கு 500 ரெம்டெசிவிர் மருந்துதான் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மீதமுள்ளவர்கள் மறுநாள் வந்து வாங்கிக் கொள்ள டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது.

இதனால் ஏற்படும் தாமதத்தையும், சிரமத்தையும் போக்க ரெம்டெசிவிர் மருந்தை நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ஆஸ்பத்திரிகளுக்கு அரசே நேரிடையாக வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கோவைக்கு ரெம்டெசிவிர் மருந்து வாங்க வந்த ஜீவானந்தம் கூறியதாவது:-


எனது தந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 

அவருக்கு நுரையீரல் அதிகளவு பாதிக்கப்பட்டு உள்ளதால் அவரை காப்பாற்ற டாக்டர்களின் ஆலோசனைப்படி ரெம்டெசிவிர் மருந்தை வாங்க வந்துள்ளேன்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் இந்த மருந்து விற்பனை செய்வதை அறிந்து அங்கு சென்றேன். நான் சென்னைக்கும், விழுப்புரத்துக்கும் கடந்த 4 நாட்களாக அலைகிறேன். 

ஆனால் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கவில்லை. எனவே கோவையில் விற்பனை செய்வதை அறிந்ததும் இங்கு வந்து உள்ளேன். இதுபோன்ற பெருந்தொற்று காலங்களில் அரசே ரெம்டெசிவிர் மருந்தை தேவைப்படும் தனியார் மருத்துவமனைகளுக்கு வினியோகம் செய்ய வேண்டும். 
மதுரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தேன்


எனவே ரெம்டெசிவிர் மருந்துக்கு அங்கே...இங்கே என்று அலையும்  அவல நிலை மாறுமா?  என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story