கலெக்டருக்கு கொரோனா தொற்று
ராமநாதபுரம் கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதை தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதை தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா பரவல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பரவல் தீவிரம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போதைய நிலையில் நாள்தோறும் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி 200 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது 300 என்ற அளவை தொடும் வகையில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டு வருகிறது. நாள்தோறும் பலர் பலியாகி வருகின்றனர்.
மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும், வீடுகளில் தனிமைபடுத்திக்கொண்டும் 1250 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நேற்று முன்தினம் மாலை அலுவலகத்தில் கோப்புகள் பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது.
சிகிச்சை
இதனை தொடர்ந்து உடனடியாக அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் இரவோடு இரவாக அவர் மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் 2 தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர். எப்போதும் முககவசம் அணிந்தபடி அடிக்கடி கைகழுவி சமூக இடைவெளியுடன் இருப்பவர். தன்னை சந்திப்பவர்களையும், தான் செல்லும் இடங்களில் சந்திப்பவர்களையும் அவர் முககவசம் அணியுங்கள், கைகழுவுங்கள், சமூக இடைவெளியுடன் இருங்கள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது என்று அறிவுரை கூறிவருபவர்.
2 தடுப்பூசி
2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டு முககவசம் அணிந்து மிகுந்த கவனத்துடன் இருந்து வந்த கலெக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதில் இருந்து மக்கள் அனைவரும் அந்த கொரோனா வைரசின் ஆபத்தினை புரிந்து கொள்ள வேண்டும். எந்த வழியில் எப்படி நம் உடலுக்குள் புகுந்து மனிதனை ஆட்கொள்கிறது இது ஆபத்தான கிருமி என்பதை மக்கள் தெரிந்து கொண்டு வீட்டிலேயே இருப்போம், தனித்திருப்போம், முககவசம் அணிவோம், சமூக இடைவெளியுடன் இருப்போம், வெளியில் செல்வதை தவிர்ப்போம் என்பதை உறுதியுடன் கடைப்பிடித்து நமக்கு மட்டுமல்லாமலும் நம்மோடு உள்ளவர்களுக்கும் தொற்று பரவாமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
Related Tags :
Next Story