கலவைபுதூர் கிராமத்தில் தண்டோரா அடித்து கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
கலவைபுதூர் கிராமத்தில் தண்டோரா அடித்து கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
கலவை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் உத்தரவின்படி கலவை போலீசார் கலவைபுதூர் கிராமத்தில் நேற்று கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி ஆகியோர் தலைமையில் தண்டோரோ அடித்து கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.
இதில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். எப்போதும் வெந்நீர் அருந்த வேண்டும். ஒருவருக்கொருவர் 2 அடி தூரத்தில் நின்று பேச வேண்டும். உங்கள் உயிர்களை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். கொரோனா என்பது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது ஆகவே அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என தண்டோரா அடித்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
Related Tags :
Next Story