மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபரை வெட்டிய தொழிலாளி கைது
மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபரை வெட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 32), தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக நந்தினி கணவரை பிரிந்து கோட்டூரில் தனியாக வசித்து வருகிறார்.
இதற்கிடையில் விஷ்ணுபிரசாத் என்பவருடன் நந்தினி அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் கோட்டூரில் நந்தினி வசிக்கும் வீட்டிற்கு இரவு காளிமுத்து சென்றார்.
அப்போது அங்கு நந்தினியும், விஷ்ணு பிரசாத்தும் பேசிக் கொண்டிருந்தனர். இதை பார்த்ததும் ஆத்திரத்தில் அங்கு இருந்த அருவாமனையை எடுத்து, விஷ்ணு பிரசாத்தை வெட்டினார். இதில் அவரது பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் சிகிச்சகை்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story