ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை
ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காரைக்குடி,
காரைக்குடி அருள் நகரை சேர்ந்தவர் வாலகுரு (வயது 41). இவரது மனைவி கனிமொழி. வாலகுரு இந்திய ராணுவத்தில் மிசோரத்தில் பணிபுரிந்து வந்தார். தற்போது விடுமுறையில் காரைக்குடி வந்தார்.குடும்ப பிரச்சினை காரணமாக இவருக்கும் இவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கனிமொழி கணவருடன் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில் கனிமொழியின் தந்தை மருமகனிடம் சமாதானம் பேசுவதற்காக அவரது வீட்டிற்கு சென்றார்.வீட்டினுள் சென்று பார்த்தபோது வாலகுரு தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story