சாய்ந்து வரும் மின்கம்பம்


சாய்ந்து வரும் மின்கம்பம்
x
தினத்தந்தி 12 May 2021 12:07 AM IST (Updated: 12 May 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

சாய்ந்து வரும் மின்கம்பத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்

மேலூர்
மேலூர் அருகே கிடாரிப்பட்டி மேலத்தோப்பு கிராமம் உள்ளது . இங்கு வீடுகள் நெருக்கமான இடத்தில் மின்கம்பம் ஒன்றின் அடிப்பகுதி உடைந்து எந்த நேரத்திலும் கீழே சாயும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து அழகர்கோவிலில் உள்ள மின்வாரிய உயர் அதிகாரியிடம் புகார் மனு அளித்தும் புதிய மின்கம்பம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும் இந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story