கொரோனா பாதித்த மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை


கொரோனா பாதித்த மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 May 2021 12:24 AM IST (Updated: 12 May 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தினருக்கு தன்னிடம் இருந்து வைரஸ் பரவி விடும் என்ற பயத்தில், கொரோனா பாதித்த மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சாம்ராஜ்நகர் அருகே நடந்து உள்ளது.

கொள்ளேகால்:



தூக்குப்போட்டு தற்கொலை 

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா இக்கடஹள்ளி கிராமத்தை சேர்ந்த சித்தம்மா(வயது 70). இவர் தனது மகன், மருமகள், பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

கடந்த 5-ந் தேதி கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இதனால் அவர் வீட்டு தனிமையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் உணவு கொடுக்க செல்லும் மகனிடம் என்னால் உனக்கும், மருமகள், பேரக்குழந்தைகளும் வைரஸ் பரவி விடுமோ என்று பயமாக உள்ளது என்று அடிக்கடி கூறி வந்து உள்ளார். 

இந்த நிலையில் நேற்று காலை சித்தம்மா தான் தங்கி இருந்த அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் உடனடியாக கொள்ளேகால் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 

உடல் அடக்கம் 

அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், சுகாதாரத்துறையினர் சித்தம்மாவின் உடலை கைப்பற்றினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்ததும் சித்தம்மாவின் உடலை சுகாதாரத்துறையினர் எடுத்து சென்று அடக்கம் செய்தனர். 

முன்னதாக போலீசார் நடத்திய விசாரணையில் தன்னிடம் இருந்து குடும்பத்தினருக்கு வைரஸ் பரவி விடுமோ என்ற பயத்தில் சித்தம்மா தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கொள்ளேகால் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 


Next Story