காய்கறி வேன் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்


காய்கறி வேன் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 12 May 2021 12:36 AM IST (Updated: 12 May 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

காய்கறி வேன் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்

பேரையூர்
தென்காசி மாவட்டம் குறும்பலபேரியை சேர்ந்தவர் அருண்(வயது 28). அடைகரைபட்டினத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் ஆகியோர் மதுரையிலிருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். அப்போது டி.கல்லுப்பட்டி அருகே உள்ள குன்னத்தூர் சாலை வளைவில் வேன் செல்லும்போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த அருண், ஸ்டாலின், கீழுப்பாவூரை சேர்ந்த வேன் டிரைவர் முத்துராஜ் ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். 3 பேரும் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story