ஊரடங்கு நேரத்தில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம்


ஊரடங்கு நேரத்தில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 12 May 2021 12:36 AM IST (Updated: 12 May 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு நேரத்தில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

கரூர்
 தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு நேற்று முன்தினம் முதல் 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை கடைகள் திறக்கப்பட்டு இருந்தாலும் கடைகள் அடைக்கப்பட்ட பிறகும் ஊரடங்கு நேரத்தில் சிலர் தேவையின்றி இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிகின்றனர். அவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று லைட்ஹவுஸ், திருமாநிலையூர் பாலம், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் நின்று தேவையின்றி இரு சக்கர வானங்களில் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகள் மற்றும் முககவசம் அணியாமல் சுற்றி திரிந்தவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.


Next Story