சரக்கு லாரி கவிழ்ந்த விபத்தில் 1,000 கோழிகள் செத்தன
சார்மடி மலைப்பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்த விபத்தில் 1,000 கோழிகள் செத்தன. டிரைவர் படுகாயம் அடைந்தார்.
சிக்கமகளூரு:
சரக்கு லாரி கவிழ்ந்தது
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே அருகே சார்மடி மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சிக்கமகளூருவில் இருந்து மங்களூருவுக்கு கோழிகளை ஏற்றிக்கொண்டு சார்மடி மலைப்பாதை வழியாக ஒரு சரக்கு லாரி சென்று கொண்டு இருந்தது.
அந்த மலைப்பாதையின் 2-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுபாட்டை இழந்த சரக்கு லாரி தறிகெட்டு ஓடி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியை ஓட்டி வந்த ஹரீஸ் காலில் முறிவு ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
1,000 கோழிகள் செத்தன
மேலும் இந்த விபத்தில் லாரியின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 1,000-க்கும் மேற்பட்ட கோழிகள் செத்தன. இதுபற்றி அறிந்த பனகல் போலீசார் அங்கு விரைந்து சென்று டிரைவர் ஹரீசை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சாலையில் கவிழ்ந்த லாரியையும், செத்து கிடந்த கோழிகளையும் கிரேன் உதவியுடன் போலீசார் அப்புறப்படு்த்தினர். இந்த விபத்து குறித்து பனகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story