கிணற்றில் இறந்து கிடந்த லாரி டிரைவர்


கிணற்றில் இறந்து கிடந்த லாரி டிரைவர்
x
தினத்தந்தி 12 May 2021 12:46 AM IST (Updated: 12 May 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே கிணற்றில் லாரி டிரைவர் மர்மமாக இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர், மே.
விருதுநகர் அருகே கிணற்றில் லாரி டிரைவர் மர்மமாக இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லாரி டிரைவர்
விருதுநகரில் உள்ள நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 44). லாரி டிரைவர். இவரது மனைவி சித்ராதேவி (42). பட்டாசு ஆலையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் கருப்பசாமிக்கும், அவரது உறவினர் பெண் ஒருவருக்கும் கடந்த 15 வருடங்களாக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு கருப்பசாமி தனது மனைவி சித்ராதேவியிடம் ரூ.200ஐ பெற்றுக் கொண்டு வெளியில் செல்வதாக கூறிச் சென்றார்.
இறந்து கிடந்தார்
இரவு வீடு திரும்பாத நிலையில் நேற்று காலை கருப்பசாமி தவசிலிங்காபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த ஆமத்தூர் போலீசார் அங்கு சென்று தீயணைப்பு படையினர் உதவியுடன் கருப்பசாமியின் உடலை மீட்டனர். இது குறித்து கருப்பசாமியின் மனைவி சித்ராதேவி ஆமத்தூர் போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், தனது கணவரின் சாவு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார். இதனை தொடர்ந்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story