மலைத்தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி சாவு
மலைத்தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவருடைய மனைவி பழனியம்மாள்(வயது 87). இவர் சம்பவத்தன்று கண்டராதித்தம் சாலையில் உள்ள அவரது தோப்பிற்கு வயல் வேலைக்காக சென்றபோது, அங்குள்ள மரத்தில் இருந்த தேன்கூடு கீழே விழுந்தது. அதில் இருந்து வந்த மலைத்தேனீக்கள் பழனியம்மாளை கடித்தன. இதனால் அவர் சத்தம் போட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க முயன்றனர். அவர்களையும் மலைத்தேனீக்கள் கடித்தன. இது பற்றி தகவல் அறிந்த அப்பகுதி இளைஞர்கள் விரைந்து வந்து மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பழனியம்மாள் உயிரிழந்தார்.
Related Tags :
Next Story