களியக்காவிளை சோதனை சாவடியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


களியக்காவிளை சோதனை சாவடியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 12 May 2021 1:50 AM IST (Updated: 12 May 2021 1:50 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்திற்குள் நுழைய இ-பாஸ் கட்டாயமாக்க பட்டுள்ளதையடுத்து களியக்காவிளை சோதனை சாவடியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆய்வு செய்தார்.

களியக்காவிளை, 
குமரி மாவட்டத்திற்குள் நுழைய இ-பாஸ் கட்டாயமாக்க பட்டுள்ளதையடுத்து களியக்காவிளை சோதனை சாவடியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆய்வு செய்தார்.
கொரோனா பரவல் தீவிரம்
குமரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. தினமும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து குமரிக்கு வருகிறவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்தின் எல்லையில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
3 அடுக்கு பாதுகாப்பு
 குமரி - கேரள எல்லையான களியக்காவிளை சோதனைச்சாவடியில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகிறது.
இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நேற்று களியக்காவிளை சோதனை சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் போலீசாரிடம், கேரளாவில் இருந்து எந்த வாகனங்களும் அனுமதியின்றி உள்ளே நுழைய அனுமதிக்கக் கூடாது,  இ- பாஸ் முறையை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும், பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும், சமூக இடைவெளி, முககவசம் அணிவது போன்ற விதிமுறைகளை மீறும் பொதுமக்களிடம் அறிவுரை மற்றும் விழிப்புணர்வு கூறி அனுப்ப வேண்டும் என்று கூறினார். 

Next Story