சேலத்தில் ரேஷன் கார்டு வாங்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு


சேலத்தில் ரேஷன் கார்டு வாங்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 May 2021 2:15 AM IST (Updated: 12 May 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ரேஷன் கார்டு வாங்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்:
சேலத்தில் ரேஷன் கார்டு வாங்க பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா நிவாரணம்
சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்றால் கொரோனா நிவாரணம், மாதம் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார். அதன்படி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இதையொட்டி கொரோனா நிவாரண உதவித்தொகை திட்டத்தை நேற்று முன்தினம் முதல் கட்டமாக ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கி தொடங்கி வைத்தார்.  ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே நிவாரணம் மற்றும் உதவித்தொகைகள் வழங்கப்படும்.
புதிய ரேஷன் கார்டு
இதனால் கடந்த ஜனவரி மாதத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி சேலத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கியது. இதையொட்டி அஸ்தம்பட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நடைபெற்றது.
இது குறித்து தகவல் அறிந்த புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த பலர் நேற்று காலை தாலுகா அலுவலகம் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அலுவலக ஊழியர்கள் பொதுமக்களை வரிசைப்படுத்தி, புதிய ரேஷன் கார்டுகளை வினியோகம் செய்தனர்.

Next Story