திசையன்விளை அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்கள் கொள்ளை
திசையன்விளை அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளை போட்டு மதுபாட்டில்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
திசையன்விளை:
தினசயன்விளை அருகே பெட்டைகுளத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்த கடையின் சுவரில் துளை போட்டு மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த 1,070 மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 86 ஆயிரத்து 60 இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கடை மேற்பார்வையாளர் குமார், திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.
டாஸ்மாக் கடை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். முழுஊரடங்கு நேரத்தில் டாஸ்மாக் கடையின் சுவரில் துளை போட்டு மதுபாட்டில்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story