ஊரடங்கை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.3 கோடியே 20 லட்சம் வசூல்


ஊரடங்கை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.3 கோடியே 20 லட்சம் வசூல்
x
தினத்தந்தி 12 May 2021 2:36 AM IST (Updated: 12 May 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 2 நாட்கள் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.3 கோடியே 20 லட்சம் வசூல் ஆகி உள்ளது.

சேலம்:
ஊரடங்கை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 2 நாட்கள் இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.3 கோடியே 20 லட்சம் வசூல் ஆகி உள்ளது.
முழு ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதை முன்னிட்டு கடந்த 9-ந்தேதி இரவுக்குள் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வேலை பார்ப்பவர்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 8 மற்றும் 9-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இது குறித்து அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட மேலாண்மை இயக்குனர் மோகனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
சேலம் கோட்டத்தில் வழக்கமாக 1,100 பஸ்கள் சென்னை, கடலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கத்தை விட கடந்த 8-ந்தேதி கூடுதலாக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
சிறப்பு பஸ்கள்
அதே போன்று 9-ந்தேதியும் கூடுதலாக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 2 நாட்கள் மொத்தம் 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 2 நாட்களும் இரவு 8 மணி வரை பஸ்கள் இயக்கப்பட்டன.
சேலம் பஸ் நிலையத்தில் இருந்து 9-ந்தேதி இரவு அனைத்து பயணிகளையும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதன் மூலம் ரூ.3 கோடியே 20 லட்சம் வசூல் ஆகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story