மல்லசமுத்திரத்தில் கொரோனா நிவாரண நிதிக்கு டோக்கன் வினியோகம்


மல்லசமுத்திரத்தில் கொரோனா நிவாரண நிதிக்கு டோக்கன் வினியோகம்
x
தினத்தந்தி 12 May 2021 2:51 AM IST (Updated: 12 May 2021 2:51 AM IST)
t-max-icont-min-icon

மல்லசமுத்திரத்தில் கொரோனா நிவாரண நிதிக்கு டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது.

மல்லசமுத்திரம்:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி முதல் தவணையாக குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் பணிக்கு டோக்கன் வினியோகம் நேற்று முன்தினம் தொடங்கியது. மல்லசமுத்திரம் பேரூராட்சி, ஒன்றிய பகுதிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்து வருகின்றனர். மல்லசமுத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட மேட்டுப்பாளையம், பள்ளிப்பட்டி, மாமரப்பட்டி, சத்யாநகர், சூரியகவுண்டம்பாளையம், பீமரப்பட்டி ஆகிய இடங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் மகாலிங்கம், குமதா ஆகியோர் டோக்கன் வழங்கினர். இந்த பணியில் கட்சியினரும் ரேஷன் கடை ஊழியர்களுடன் இணைந்து செயல்பட்டனர்.

Next Story