காலை முதல் இரவு வரை கோழிகளுக்கு குளிர்ந்த நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்; ஆராய்ச்சி நிலையம் தகவல்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் காலை முதல் இரவு வரை கோழிகளுக்கு குளிர்ந்த நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் காலை முதல் இரவு வரை கோழிகளுக்கு குளிர்ந்த நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) 2 மி.மீட்டர் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இல்லை. காற்று மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் தெற்கு திசையில் இருந்து வீசும்.
வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 104 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 82.4 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும், அதிகபட்சமாக 74 சதவீதமாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் அடுத்த 3 நாட்களுக்கு கோடை மழையை எதிர்பார்க்கலாம். இருப்பினும் கோழிப்பண்ணையாளர்கள் தொடர்ந்து கோடைக்கால பராமரிப்பு முறைகளை தீவிர முறையில் கடைபிடிக்க வேண்டும். தீவன எடுப்பு, கோழிகளில் மிகவும் குறைந்து உள்ளது. அதன் காரணமாக முட்டை உற்பத்தியும், முட்டை எடையும் குறைந்து உள்ளது.
வெப்ப அதிர்ச்சி
சமீபத்தில் பெய்த மழை காரணமாக குறைந்த வெப்ப அளவு, மீண்டும் உயர தொடங்கி உள்ளது. ஆதலால் வரும் நாட்களில் கோடை காலத்திற்கான தீவன மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும். தீவனத்தில் அமீனோ அமிலங்கள், தாவர எண்ணெய் சேர்த்து எரிசக்தியின் அளவை உயர்த்த வேண்டும். எலக்ட்ரோலைட்ஸ் உப்புகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை கலந்து தர வேண்டும். அதிக அளவில் ஏற்படும் முட்டை ஓடு குறைபாடுகளை களைய சோடா உப்பை சேர்த்து வர வேண்டும். அயற்சி ஏற்படா வண்ணம் தீவனமிடுதலை காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே வைத்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம் வெப்ப அதிர்ச்சியில் இருந்து கோழிகளை காப்பாற்றலாம். கோழிகளுக்கு காலை முதல் இரவு வரை குளிர்ந்த நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
Related Tags :
Next Story