நெல்லை மாநகராட்சி சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி மூலிகை பெட்டகம்
நெல்லை மாநகராட்சி சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி மூலிகை பெட்டகம் வழங்கப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
நெல்லை மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் மற்றும் பல்வேறு நோய் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி மற்றும் பாரம்பரிய சித்த மருத்துவர்கள் கூட்டமைப்பு இணைந்து, நோய் எதிர்ப்பு சக்தி தரும் 6 விதமான மூலிகைகள் உள்ளடக்கிய ‘சித்த மூலிகை பெட்டகம்’ ரூ.100 விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த மூலிகை பெட்டகத்தில் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், தாளிசாதி மாத்திரை, திரிபலாதி மாத்திரை, அஸ்வசுந்தா மாத்திரை மற்றும் ஆர்சனிக் ஆல்பம் 30சி ஆகிய 6 வகையான மூலிகை பொருட்கள் உள்ளது. இந்த மூலிகை பெட்டகம் நெல்லை மாநகராட்சியின் 4 மண்டலங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த மூலிகை பெட்டகத்தை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் வீட்டுக்கு கொண்டு வந்து கொடுக்கவும் (டோர் டெலிவரி) ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story