அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை அருகே கரடி நடமாட்டம்


அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை அருகே கரடி நடமாட்டம்
x
தினத்தந்தி 12 May 2021 4:17 AM IST (Updated: 12 May 2021 4:17 AM IST)
t-max-icont-min-icon

வரட்டுப்பள்ளம் அணை அருகே கரடி நடமாட்டம்

அந்தியூர்
அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து யானைகள், மான்கள், கரடி, நாய் காட்டுப்பன்றி, சிறுத்தை உள்பட பல்வேறு வகையான வன விலங்குகள் வந்து செல்கின்றன. அவை அணையில் தண்ணீரை குடித்துவிட்டு அணைப்பகுதியில் விளையாடி செல்கின்றன.
இந்த நிலையில் நேற்று மாலை அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் குடிப்பதற்காக கரடி ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தது. பின்னர் அது அணையில் தண்ணீரை குடித்து விட்டு அந்த பகுதியிலேயே சிறிது நேரம் நடமாடியது. அதன்பின்னர் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘வனப்பகுதிக்கு செல்பவர்கள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும். கரடி மற்றும் செந்நாய் அதிக அளவில் உள்ளதால் அவை பொதுமக்களை தாக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் அணை பகுதிக்கு மாலை நேரங்களில் யாரும் செல்ல வேண்டாம்’ என்றனர்.

Related Tags :
Next Story