கடையநல்லூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்
கடையநல்லூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள வடகரை கிராமத்தில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு மா, வாழை, தென்னை, நெல், நெல்லி, இலவம் பஞ்சு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிக்குள் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
கடந்த ஒரு வாரமாக வடகரை பகுதியில் உள்ள பருத்திக்காடு, சென்னாபொத்தை ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து அங்கிருந்த 80-க்கும் மேற்பட்ட மா, தென்னை, இலவம்பஞ்சு மரங்களை சேதப்படுத்தி உள்ளது. மேலும் மோட்டார் பம்பு செட்டுகள், பைப் லைன்கள், மின்சார வேலிகள் அனைத்தையும் நாசம் செய்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலமுறை வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் காட்டு யானைகளை மலைப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மாநில விவசாய சங்க செயலாளர் ஜாகிர் உசேன் குற்றம்சாட்டி உள்ளார்.
Related Tags :
Next Story