சுரண்டையில் கொரோனா தடுப்பூசி முகாம்
சுரண்டையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
சுரண்டை:
சுரண்டையில் தமிழக அரசின் சுகாதார துறை, வருவாய் துறை, சுரண்டை நகர பஞ்சாயத்து, மாவட்ட தொழில் மையம் சார்பில், கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் ராஜகுமார் தலைமை தாங்கினார். ஒய்.எம்.சி.ஏ. தலைவர் பாலச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
பழனி நாடார் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்’ என்றார்.
முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) பாலச்சந்தர், சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா, சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரகுமார், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story