ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிதி ரூ.2 ஆயிரம் 15-ந்தேதி முதல் வினியோகம்


ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிதி ரூ.2 ஆயிரம் 15-ந்தேதி முதல் வினியோகம்
x
தினத்தந்தி 12 May 2021 4:54 AM IST (Updated: 12 May 2021 4:54 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வருகிற 15-ந்தேதி முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது.

தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில கூறப்பட்டிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும் மே மாதத்தில் 658 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 846 அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் நிவாரண தொகையினை வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. 

இந்த நிவாரண தொகையை ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் கடைகளில் வருகிற 15-ந்தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்கள் வீதம் வழங்கப்படும். அந்த டோக்கன்களில் உதவித்தொகை பெறும் நாள் மற்றும் நேரம் தெரிவிக்கப்படும். டோக்கன்கள் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீடுதோறும் சென்று நேரடியாக வழங்கப்படும். காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ரேஷன் கடைகளில் வந்து உதவித்தொகையை பெற்றுக் கொள்ளலாம். 

உதவித் தொகையை பெற்றுக்கொள்ள வரும் நபர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு 1 மீட்டர் சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும் என்றும், முககவசம் கண்டிப்பாக அணிந்து வர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story