தூத்துக்குடி ரவுடி கொலை வழக்கு கைதான போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
தூத்துக்குடி ரவுடி கொலை வழக்கில் கைதான போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ரவுடி கொலை வழக்கில் கைதான போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கொலை வழக்கு
தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மீளவிட்டான் சுடுகாட்டுப் பகுதியில் தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த பேனட் மச்சாது மகன் லூர்து ஜெயசீலன் (வயது 41) கடந்த 9-ந்தேதி இரவு கொலை செய்யப்பட்டார்.
சஸ்பெண்டு
இந்த வழக்கில் தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ரவுடி மோகன்ராஜ் மற்றும் தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்த பொன் மாரியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து போலீஸ் ஏட்டு பொன் மாரியப்பனை தற்காலிக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story