தொடரும் தொற்று பாதிப்பின் வேகம் புதுவையில் 14 வயது சிறுமி உள்பட 30 பேர் சாவு புதிதாக 2,049 பேருக்கு கொரோனா
புதுவையில் தொற்று பாதிப்பின் வேகத்தால் புதிதாக 2 ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 14 வயது சிறுமி உள்பட 30 பேர் பலியாகினர்.
புதுச்சேரி,
புதுவையில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதேபோல் உயிரிழப்பும் நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 58 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அவர்களில் 2 ஆயிரத்து 49 பேருக்கு தொற்று உறுதியானது. கொரோனா பரவல் தொடங்கிய பின்பு மிக அதிக அளவில் தற்போது தான் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,359 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒரே நாளில் 30 பேர் பலியாகி உள்ளனர். அதாவது தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த 80 வயது மூதாட்டி, திருவண்டார்கோவில் புதுநகரை சேர்ந்த 14 வயது சிறுமி, வில்லியனூர் பெரியபேட்டை சேர்ந்த 50 வயது ஆண், அய்யனார்நகரை சேர்ந்த 52 வயது ஆண், கொசப்பாளையத்தை சேர்ந்த 56 வயது ஆண், அரியாங்குப்பத்தை சேர்ந்த 43 வயது பெண், முதலியார்பேட்டை சாமிநாயக்கர் வீதியை சேர்ந்த 84 வயது முதியவர், மகாவீர் நகரை சேர்ந்த 62 வயது முதியவர், பாகூர் வடக்கு வீதியை சேர்ந்த 81 வயது முதியவர், வில்லியனூர் தில்லை நகரை சேர்ந்த 82 வயது மூதாட்டி, வீமநகரை சேர்ந்த 55 வயது ஆண், ஆண்டியார்பாளையத்தை சேர்ந்த 58 வயது ஆண், கீழுர் காமராஜ் நகரை சேர்ந்த 62 வயது முதியவர் ஆகியோர் பலியாகி உள்ளனர்.
புதுவை அரசு ஆஸ்பத்திரியில் கொம்பாக்கத்தை சேர்ந்த 58 வயது பெண், கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடேசன் நகரை சேர்ந்த 45 வயது ஆண், சண்முகாபுரத்தை சேர்ந்த 67 வயது முதியவர், உருளையன்பேட்டை செங்குந்தர் வீதியை சேர்ந்த 78 வயது மூதாட்டி, முத்தியால்பேட்டை கங்கை வீதியை சேர்ந்த 85 வயது முதியவர், ஜிப்மரில் சுப்பையா நகரை சேர்ந்த 70 வயது மூதாட்டி, 84 வயது மூதாட்டி, ரெயின்போ நகரை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஆகியோர் பலியாகி உள்ளனர்.
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் நேரு நகரை சேர்ந்த 52 வயது பெண், கோட்டுச்சேரியை சேர்ந்த 77 வயது மூதாட்டி, புதுநகரை சேர்ந்த 59 வயது ஆண், விழுதியூரை சேர்ந்த 53 வயது பெண், டி.ஆர்.பட்டினத்தை சேர்ந்த 74 வயது முதியவர், கோவில்பத்து நேருநகரை சேர்ந்த 70 வயது மூதாட்டி, ஏனாமில் 65 வயது மூதாட்டி, 65 வயது முதியவர் மற்றும் 60 வயது முதியவர் ஆகியோர் பலியாகி உள்ளனர்.
மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 71 ஆயிரத்து 273 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 75 ஆயிரத்து 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2 ஆயிரத்து 72 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 12 ஆயிரத்து 757 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது 14 ஆயிரத்து 829 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை 59 ஆயிரத்து 177 பேர் குணமடைந்துள்ளனர். அதேநேரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையும் 1,018 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 1.36 சதவீதமாக உள்ளது.
நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 127 பேரும், முன்கள பணியாளர்கள் 73 பேரும், பொதுமக்கள் 596 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதுவரை 2 லட்சத்து 18 ஆயிரத்து 622 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story