லாரி மோதி 2 பெண்கள் பலி
சோழவந்தான் அருகே இறுதி சடங்கிற்காக தண்ணீர் எடுக்கச் சென்றபோது லாரி மோதி 2 பெண்கள் பலியாகினர். மேலும் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
சோழவந்தான்,
சோழவந்தான் அருகே இறுதி சடங்கிற்காக தண்ணீர் எடுக்கச் சென்றபோது லாரி மோதி 2 பெண்கள் பலியாகினர். மேலும் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
ஆற்றில் நீர் எடுக்க சென்றனர்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையா பிள்ளை (வயது 80) என்பவர் நேற்று காலை காலமானார். அவரது இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் அவரது உறவினர்கள் வைகை ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றனர்.
அவர்கள் ரோட்டின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது விருதுநகரில் இருந்து செம்பட்டி நோக்கி சென்ற டிப்பர் லாரி அவர்கள் மீது மோதியது. இதில் திருவேடகத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது மனைவி பொன்மலர் (வயது 40) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கனகவேல் என்பவரது மனைவி ராணி (40) பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்து போனார். ேமலும் 2 பெண்கள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது
இது குறித்து தகவல் அறிந்ததும் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்கு காரணமான லாரியை பறிமுதல் செய்து லாரியை ஓட்டி வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் (53) என்பவரை கைது செய்தனர். விபத்தில் இறந்த பொன்மலருக்கு ரஞ்சித்ராஜா (21) என்ற மகனும், ராணிக்கு 2 மகள்களும் உள்ளனர்.
இறுதிச்சடங்குகள் செய்ய தண்ணீர் எடுக்க சென்ற பெண்கள் லாரி மோதி பலியான சம்பவம் திருவேடகம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story