உடுமலை பகுதியில் பறிக்க ஆளில்லாமல் பழுத்துக்கிடக்கும் தக்காளிப்பழங்கள் செடிகளிலேயே வீணாகும் அவலம் அரங்கேறி வருகிறது.
உடுமலை பகுதியில் பறிக்க ஆளில்லாமல் பழுத்துக்கிடக்கும் தக்காளிப்பழங்கள் செடிகளிலேயே வீணாகும் அவலம் அரங்கேறி வருகிறது.
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் பறிக்க ஆளில்லாமல் பழுத்துக்கிடக்கும் தக்காளிப்பழங்கள் செடிகளிலேயே வீணாகும் அவலம் அரங்கேறி வருகிறது.
விற்பனை குறைவு
உடுமலை பகுதியில் காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. இதில் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாகவே தக்காளிக்கு போதிய விலை கிடைக்காத நிலை நீடித்து வருகிறது. 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ 50 க்கும் குறைவாகவே விற்பனையாகி வருகிறது. தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக வெளியூர்களுக்குத் தக்காளி கொண்டு செல்வதில் சிரமங்கள் ஏற்படுகிறது. மேலும் மதியம் 12 வரை மட்டுமே மளிகை மற்றும் காய்கறிக் கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் விற்பனை குறைவாகவே உள்ளது.மேலும் உடுமலை மொத்த விற்பனை சந்தைக்கு தற்போது வெளியூர் வியாபாரிகள் அதிக அளவில் வருவதில்லை. இதனால் சில நேரங்களில் காய்கறிகளை வாங்க ஆளில்லாத நிலையும் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் படுகிறார்கள்.
மாற்று சாகுபடி
குறிப்பாக தக்காளி விவசாயிகள் கடும் இழப்பை சந்திக்கின்றனர். ஏற்கனவே சந்தைக்கு கொண்டு வருவதற்கான வாகனச் செலவு கூட கட்டுப்படியாகாத நிலையில் திரும்ப கொண்டு செல்வது சாத்தியமில்லாத விஷயமாக உள்ளது. இதனால் இலவசமாகக் கூட கொடுத்துச் செல்ல விவசாயிகள் தயாராக உள்ளனர்.இத்தகைய சூழ்நிலையால் பல விவசாயிகள் தக்காளிப் பழங்களை செடிகளிலேயே பறிக்காமல் விட்டுள்ளனர். யார் வந்து கேட்டாலும் இலவசமாக பறித்துக் கொள்ள அனுமதிக்கிறார்கள். ஒரு சில விவசாயிகள் உழவு ஓட்டி தக்காளிச் செடிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டு மாற்று சாகுபடிக்குத் தயாராகி வருகிறார்கள். இடுபொருட்கள் விலை உயர்வு, கூலி ஆட்கள் பற்றாக்குறை, தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ளிட்ட பலவேறு பிரச்சினைகளை விவசாயிகள் எதிர்கொண்டு வரும் நிலையில் போதிய விலை கிடைக்காத நிலை விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் உற்பத்திக்கு வழி செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை மீண்டும் உரக்க ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
Related Tags :
Next Story