ராமநத்தம் அருகே என்ஜினீயரிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை காதலன் பேசமறுத்ததால் விபரீத முடிவு


ராமநத்தம் அருகே என்ஜினீயரிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை காதலன் பேசமறுத்ததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 12 May 2021 10:23 PM IST (Updated: 12 May 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

ராமநத்தம் அருகே காதலன் தன்னுடன் பேச மறுத்ததால் என்ஜினீயரிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராமநத்தம், 

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள பெரங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து மகள் பீலாமேரி (வயது 22). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. 4-ம் ஆண்டு படித்து வந்தார். 

இந்த நிலையில் பீலாமேரியும், அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் மங்கலேஷ் (22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

காதலனுடன் தகராறு

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மங்கலேஷ் பீலாமேரியிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இது தொடர்பாக, பீலாமேரி 3 நாட்களுக்கு முன்பு மங்கலேசை நேரில் சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

 மேலும் தன்னிடம் பேசாததற்கு காரணம் குறித்து கேட்டபோது, அதற்கு பதில் அளிக்காமல் மங்கலேஷ் சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த  பீலாமேரி ஏற்கனவே வாங்கி வைத்திருந்த விஷத்தை (எலிபேஸ்ட்) குடித்துவிட்டார். 

இதையறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பீலாமேரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

வீடியோ பதிவு செய்தார்

இதற்கிடையே விஷத்தை குடிப்பதற்கு முன்பாக,  காதலலின் பெயரை குறிப்பிட்டு தான் விஷம் குடித்து சாவ போவதாக கூறிவிட்டு, விஷத்தை குடித்ததை தனது செல்போனில் பீலாமேரி வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார். 
இதுகுறித்து வீரமுத்து அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மங்கலேஷை கைது செய்தனர்.

Next Story