சொத்து தகராறில் அண்ணனை வெட்டிய தம்பி கைது


சொத்து தகராறில் அண்ணனை வெட்டிய தம்பி கைது
x
தினத்தந்தி 12 May 2021 10:37 PM IST (Updated: 12 May 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

சொத்து தகராறில் அண்ணனை வெட்டிய தம்பி கைது செய்யப்பட்டார்.

காரையூர், மே.13-
காரையூர் அருகே உள்ள மொரண்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. விவசாயியான இவருக்கு ரெங்கசாமி, கணேசமுருகன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பழனி தனது 2-வது மகனான கணேசமுருகன் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பழனி தன்னை கவனித்து வரும்  கணேச முருகனுக்கு தனதுசொத்துக்களை தருவதாக கூறி வந்தார். இதனையறிந்த ரெங்கசாமி சொத்துக்களை பிரித்து தர கோரி தந்தை பழனியிடமும், தம்பி கணேச முருகனிடமும் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த கணேசமுருகன் ரெங்கசாமியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து 2 தரப்பினரும் காரையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராமன் விசாரணை நடத்தி இருதரப்பை சேர்ந்த ரெங்கசாமி, அவரது மனைவி நித்யா மற்றும் பழனி, கணேசமுருகன், சிதம்பரம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதில் கணேசமுருகனை போலீசார் கைது செய்தனர்.

Next Story