கெலமங்கலம் அருகே சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை


கெலமங்கலம் அருகே  சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 12 May 2021 10:58 PM IST (Updated: 12 May 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

கெலமங்கலம் அருகே சூதாட்டத்தில் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

ராயக்கோட்டை:
கெலமங்கலம் அடுத்த தொட்டபேளூர் ஊராட்சி கோபசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பங்கி (வயது 62), விவசாயி. இவருடைய 2-வது மகன் மஞ்சு (வயது 30). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ளவர்களிடம் அவர் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இந்த நிலையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட மஞ்சு, பணத்தை இழந்து மன வேதனை அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மஞ்சு நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சம்பங்கி, கெலமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்தார். மேலும் சம்பங்கியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story