காகித கூழில் சிக்கிய 2 மயில்கள் மீட்பு


காகித கூழில் சிக்கிய 2 மயில்கள்  மீட்பு
x
தினத்தந்தி 12 May 2021 11:17 PM IST (Updated: 12 May 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

காகித கூழில் சிக்கிய 2 மயில்கள் மீட்கப்பட்டது.

நொய்யல்
புகளூர் காகித ஆலையில் செய்தித்தாள்கள் மற்றும் பல்வேறு வகையான காகிதம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த காகிதம் தயாரிப்பதற்காக பல்வேறு மரத்தூள்கள், கரும்பு சக்கை மற்றும் பழைய பேப்பர்களை கூழாக்கி அதிலிருந்து பேப்பர் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் பேப்பர் தயாரிக்கும் கூழ் ஒரு பகுதியில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காகிதக்கூழ் இருந்த பகுதி வழியாக பறந்து வந்த 2 மயில்கள் அதில் சிக்கி பறக்க முடியாமல் தத்தளித்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, காகிதக் கூழில் சிக்கிய இருந்த 2 மயில்களையும் உயிருடன் மீட்டனர். பின்னர் 2 மயில்களும் வனப்பகுதியில் விடப்பட்டன.


Next Story