ராசிபுரம் அருகே மது விற்றவர் கைது


ராசிபுரம் அருகே மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 12 May 2021 11:26 PM IST (Updated: 12 May 2021 11:45 PM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

ராசிபுரம்,

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் ராசிபுரம் அருகே குறுக்கபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 40) என்பவர் நேற்று அந்தப் பகுதியில் பீர் மற்றும் பிராந்தி பாட்டில்களை விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது அங்கு சென்ற ராசிபுரம் போலீசார் விஜயகுமாரை கைது  செய்து 12 பீர் பாட்டில்களையும் 25 குவார்ட்டர் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 ஆயிரம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட விஜயகுமார் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் டாஸ்மாக் நிறுவனத்திடம் ஒப்படைத்தனர்.

Next Story