கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
வேலூர் சலவன்பேட்டை எரிவாயு தகன மேடையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்
சாலை மறியல் முயற்சி
வேலூர் சலவன்பேட்டை, அம்மனாங்குட்டை பகுதியில் ரூ.2 கோடியில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. இந்த தகனமேடையில் கடந்த 10-ந் தேதி முதல் உடல் தகனம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதாக அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே தகவல் பரவியது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று எரிவாயு தகன மேடைக்கு சில உடல்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. அதைக்கண்ட அப்பகுதி மக்கள் கொரோவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிவாயு தகன மேடையில் எரிக்க கொண்டு செல்வதாக எதிர்ப்பு தெரிவித்து தகன மேடைக்கு செல்லும் சாலையில் திரண்டு மறியல் செய்ய முயன்றனர்.
உடல்களை எரிக்க எதிர்ப்பு
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் 3-வது மண்டல உதவி கமிஷனர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் லூர்துசாமி, சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் வேலூர் தெற்கு போலீசார் ஆகியோர் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் இந்த எரிவாயு தகன மேடையில் வயது முதிர்வு, உடல்நலக்குறைவு உள்ளிட்டவற்றால் இறப்பவர்களின் உடல்களை மட்டும் எரிக்கவேண்டும். தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்க கூடாது.
எரிவாயு தகன மேடைக்கு வரும் பாதையோரம் ஏராளமான குடும்பத்தினர் வசிக்கிறார்கள். கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை வாகனத்தில் கொண்டு வரும்போது ஏதாவது பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே இந்த வழியாக உடலைக் கொண்டு வருவதோ, எரிவாயு தகன மேடையில் எரிக்கவோ கூடாது என்றனர்.
Related Tags :
Next Story