4-வது நாளாக திரண்ட கொரோனா நோயாளிகளின் உறவினர்கள்: 2 நாட்கள் காத்திருந்தும் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கவில்லை என புலம்பல்


4-வது நாளாக திரண்ட கொரோனா நோயாளிகளின் உறவினர்கள்: 2 நாட்கள் காத்திருந்தும் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கவில்லை என புலம்பல்
x
தினத்தந்தி 13 May 2021 12:36 AM IST (Updated: 13 May 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க 2 நாட்கள் காத்திருந்தும் கிடைக்கவில்லை என கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் புலம்பினர்.

4-வது நாளாக திரண்ட கொரோனா நோயாளிகளின் உறவினர்கள்:
2 நாட்கள் காத்திருந்தும் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கவில்லை என புலம்பல்
திருச்சி,
திருச்சியில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க 2 நாட்கள் காத்திருந்தும் கிடைக்கவில்லை என கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் புலம்பினர்.

ரெம்டெசிவிர் மருந்து

கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ரெம்டெசிவிர் என்ற மருந்து அவசியமாக தேவைப்படுகிறது. இந்த மருந்து தற்போது திருச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மட்டும் வழங்கப்படுகிறது.
திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள அரசு இயன்முறை மருத்துவ சிகிச்சை பயிற்சி கல்லூரியில் (பிசியோதெரபி) இந்த மருந்தை பெற தினமும் கொரோனா நோயாளிகளின் நெருங்கிய சொந்தங்கள் படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.

4-வது நாளாக குவிந்த மக்கள்

நேற்று 4-வது நாளாக மருந்து வாங்குவதற்காக அங்கு ஏராளமானவர்கள் வந்து குவிந்தனர். முதல் நாள் இரவு மற்றும் அதிகாலை நேரத்திலேயே வரிசையில் காத்து நின்றனர். சிலர் நாற்கலிகளுடன் வந்து அமர்ந்திருந்தனர்.
காலை 10 மணிக்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யும் பணி தொடங்கியது. 

முதலில் வந்து நின்ற 50 பேர் மட்டுமே கல்லூரி வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கொண்டுவந்த ஆவணங்கள், டாக்டரின் பரிந்துரை கடிதம் மற்றும் அடையாள அட்டை ஆகிய வற்றின் அடிப்படையில் 50 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டது.

2 நாட்களாக காத்திருந்தும் இல்லை

ஆனால் வெளியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பல மணி நேரமாக காத்து நின்றனர். கடந்த 2 நாட்களாக காத்திருந்தும் உறவினருக்கு ரெம்டெசிவிர் மருந்து வாங்க முடியவில்லையே... எண்ணிக்கையை உயர்த்தி கொடுத்தால் என்ன? எனக்கூறி அங்கிருந்தவர்கள் புலம்பினர்.

அவர்களை உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்காததால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமார், போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் முடிவு எட்டப்படவில்லை.

Next Story