முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்காக கொரோனா நிதி வழங்கிய பள்ளி மாணவர், மாணவி
முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்காக பள்ளி மாணவர், மாணவி கொரோனா நிதி வழங்கினர்.
திருச்சி,
தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்றும், அந்நிதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட இயலும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி, கொரோனா நிவாரண நிதிக்காக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிலோமினாஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவி கே.தனலட்சுமி, ஓம் மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கே.சுராஜ் ஆகியோர் தங்களுடைய சேமிப்புதொகையிலிருந்து ரூ.1,966 -ஐ திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.திவ்யதர்ஷினியிடம் நேற்று வழங்கினர்.
Related Tags :
Next Story