கும்பகோணத்தில் கொரோனா தடுப்பு பணி 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆய்வு


கும்பகோணத்தில் கொரோனா தடுப்பு பணி 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 13 May 2021 1:05 AM IST (Updated: 13 May 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் கொரோனா தடுப்பு பணியை 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கும்பகோணம்:-

கும்பகோணத்தில் கொரோனா தடுப்பு பணியை 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

அதிகாரிகள் ஆய்வு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
இந்த நிலையில் கும்பகோணம் பகுதியில் நடைபெற்றும் வரும் கொரோனா தடுப்பு பணிகளை மாநில வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்தர ரெட்டி, தஞ்சை மாவட்ட கொரோனா சிறப்பு கண்காணிப்பாளர் சுப்பையன், கலெக்டர் கோவிந்தராவ் ஆகிய 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். 

கொரோனா சிகிச்சை மையம்

அப்போது கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் உள்ள காய்கறி மார்க்கெட், கோவிலாச்சேரியில் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் ஆகிய இடங்களை பார்வையிட்டனர். 
முன்னதாக வருவாய் நிர்வாக ஆணையர் நிருபர்களிடம் கூறுகையில், 
வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்பவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்கவும், அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தேவையான வசதிகள் நோயாளிகளுக்கு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

முழு ஒத்துழைப்பு

அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியும். தஞ்சை மாவட்டத்தை பொருத்தவரை ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற நிலைமை இல்லை. போதிய அளவு ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது’ என்றார். 
ஆய்வின்போது கும்பகோணம் உதவி கலெக்டர் விஜயன், நகராட்சி ஆணையர் லட்சுமி, நகர் நல அலுவலர் பிரகாஷ், கும்பகோணம் தாசில்தார் கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story