பட்டுக்கோட்டையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த 7 கடைகளுக்கு ‘சீல்’


பட்டுக்கோட்டையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த 7 கடைகளுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 13 May 2021 1:12 AM IST (Updated: 13 May 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த 7 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை:-

பட்டுக்கோட்டையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த 7 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. 
அதன்படி மளிகைக்கடைகள், பேக்கரி, காய்கறி கடைகள், பழக்கடைகள், அரிசி கடைகள் மதியம் 12 மணி வரையிலும், பால், மருந்து கடைகள் முழு நேரமும், ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரத்தில் பார்சலில் உணவு வழங்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

7 கடைகளுக்கு ‘சீல்’

இந்த நிலையில் பட்டுக்கோட்டை பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி கடைகள் திறந்திருப்பதாக, பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பாலச்சந்தருக்கு புகார் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் பட்டுக்கோட்டை தாசில்தார் (பொறுப்பு) சாந்தகுமார் தலைமையிலான குழுவினர், நகர் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட நகைக்கடை, அழகு நிலையம், மர இழைப்பகம், சூப்பர் மார்க்கெட், உள்பட 7 நிறுவனங்களுக்கு பூட்டுப் போட்டு ‘சீல்’ வைத்தனர். 
அப்போது துணை தாசில்தார்கள் பாலசுப்பிரமணியன், யுவராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story