சேலம் மாவட்டத்தில் புதிதாக 664 பேருக்கு கொரோனா தொற்று 10 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் புதிதாக 664 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் புதிதாக 664 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 10 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 475 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 664 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சேலம் மாநகராட்சி பகுதிகளில் 367 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீரபாண்டியில் 42 பேர், சேலம் ஒன்றியத்தில் 33 பேர், எடப்பாடியில் 29 பேர், ஓமலூரில் 25 பேர், வாழப்பாடியில் 21 பேர், மகுடஞ்சாவடியில் 18 பேர், அயோத்தியாப்பட்டணம், மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 17 பேர், தலைவாசலில் 15 பேர், பெத்தநாயக்கன்பாளையம், சங்ககிரி ஆகிய பகுதிகளில் தலா 13 பேர், பனமரத்துப்பட்டியில் 10 பேர், மேச்சேரி, நங்கவள்ளி ஆகிய பகுதிகளில் தலா 7 பேர், கொளத்தூரில் 6 பேர், ஆத்தூர், கொங்கணாபுரம், தாரமங்கலம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், கெங்கவல்லி, காடையாம்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளன.
48 ஆயிரத்தை தாண்டியது
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 596 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 307 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 3 ஆயிரத்து 825 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கட்டுப்படுத்த பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
10 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 35, 47, 63, 54 ஆகிய வயதுடைய ஆண்களும், 45, 61, 61, ஆகிய வயதுடைய பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
இதேபோல் 38, 60 வயதுடைய ஆண்களும், 60 வயதுடைய மூதாட்டியும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பலியாகினர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு 632 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story