கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு


கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு
x
தினத்தந்தி 13 May 2021 4:39 AM IST (Updated: 13 May 2021 4:39 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் கிணற்றில் தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.

புளியங்குடி:
புளியங்குடி சிந்தாமணி அம்பேத்கர் தெருவை சேர்ந்த மாடசாமி  மகள் சுந்தரம்மாள் (வயது 35). இவர் கடந்த சில ஆண்டுகளாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. தந்தை இறந்த நிலையில் தாயார் மாரியம்மாள் மற்றும் சகோதரர்களுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சிந்தாமணி மின்மயானத்திற்கு செல்லும் வழியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து சுந்தரம்மாள் இறந்து கிடந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story